திருப்பரங்குன்றம்; ஆடி பவுர்ணமியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பண்ண சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரமானது. மலைக்குப் பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வரலட்சுமி நோன்பை முன்னிட்டு ஹார்விபட்டி எஸ்.ஆர்.வி. நகர் கல்கத்தா காளியம்மன் கோயிலில் யாக பூஜை முடிந்து மூலவர்களுக்கு அபிஷேகம், வளையல் அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு வளையல்கள், சட்டை துணி, அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ். ஆர்.வி. நகர் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி ராஜசியாமளா மகா வாராஹி அம்மன் கோயிலில் உற்ஸவர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயில் பெருந்தேவி தாயார் ஸ்ரீ பிரசன்ன வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயாருக்கு நவ கலச அபிஷேகம் சிறப்பு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது.