திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர் சுந்தர ஆஞ்சநேயர் கோவில் திருப்பணி பாலாலய வைபவம் நடந்தது. ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் காலை 8:00 மணிக்கு பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க ஹோமம், பிம்ப பிரதிஷ்டை ஆவாகனம் செய்து, கிழக்கு வீதி, ஆஞ்சநேயர் சன்னதிக்கு ஊர்வலமாக எடுத்து சென்று வழிபாடுகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் திருப்பணிக்கான வேலைகள் துவங்கியது. நகராட்சி சேர்மன் முருகன் முன்னிலை வகித்தார். தொழிலதிபர்கள் முரளி, சக்தி, தியாகராஜன், செல்வராஜ், கண்ணப்பன், வாசன், நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், கோவிந்து, பூபதி, கட்டிட ஒப்பந்ததாரர் கிருஷ்ணன் உள்ளிட்ட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.