மேலூர் நாகம்மாள் கோயில் திருவிழா துவக்கம்; பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஆக 2025 03:08
மேலூர்; மேலூர் நாகம்மாள் கோயில் 61 ஆம் ஆண்டு ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் முப்பது நாட்கள் எண்ணெய் தாளிதம் இல்லாமல் விரதம் இருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று மண் கட்டி தெப்பக்குளத்தில் இருந்து ஐந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு மின் மோட்டார் மூலம் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 4 அடி முதல் 20 அடி நீளமுள்ள அலகு குத்தியும் மற்றும் பறவை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். நாளை ஆக. 13 முளைப்பாரி ஊர்வலம் மற்றும் புஷ்பத்தினால் ஆன தேரில் நாகம்மாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆக. 14 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவு பெறும்.