திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க லட்சுமி பதக்கம் நன்கொடை அளித்த பகதர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2025 11:08
திருப்பதி; பெங்களூரைச் சேர்ந்த ஸ்ரீ கே.எம். ஸ்ரீனிவாசமூர்த்தி என்ற பக்தர் இன்று புதன்கிழமை காலை போக ஸ்ரீனிவாசமூர்த்தியை அலங்கரிக்க ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் மற்றும் வைஜயந்தி பதித்த 148 கிராம் தங்க லட்சுமி பதக்கத்தை நன்கொடையாக வழங்கினார். இந்த ஆபரணம் ஸ்ரீவாரி கோயிலின் ரங்கநாயகுலு மண்டபத்தில் திருப்பதி தேவஸ்தான கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சவுத்ரியிடம் ஒப்படைக்கப்பட்டது.