பெரும்பாலும், சிதம்பரத்தில் மூலவர் நடராஜர் என்று நினைப்பர். ஆனால், இத்தலத்து மூலவர் ஆதிமூலநாதர் ஆவார். பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் சிவனின் நாட்டிய தரிசனத்தை, பூலோக மக்களும் கண்டு மகிழ விரும்பினர். எனவே இத்தலத்துக்கு வந்து ஆதிமூலநாதரை வேண்டி தவம் செய்தனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், திரிசகஸ்ர முனீஸ்வரர்கள் என்போரை கயிலையிலிருந்து, சிதம்பரத்திற்கு அழைத்து வந்து தைமாதம் பூசத்தில் பகல் 12 மணிக்கு நாட்டிய தரிசனம் தந்தார். இந்த திரிசகஸ்ர முனிவர்களையே தில்லை மூவாயிரவர் என்று சொல்வதுண்டு.