தேசிய கொடி அலங்காரத்தில் அன்னை ஆதிபராசக்தி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஆக 2025 11:08
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு சுதந்திர கொடி அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று நாடு முழுதும் 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு தேசிய கொடி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுதந்திர தினம் மற்றும் ஆடி கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.