ஆடிக்கிருத்திகை: திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஆக 2025 10:08
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை விழா 14ம் தேதி துவங்கியது. திருத்தணி முருகன் கோவிலில் ஆடிக் கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா, ஆடி அஸ்வினியுடன் துவங்கியது. அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
நேற்று ஆடிப்பரணியும், இன்று ஆடிக் கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் குவிந்தனர். பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். நாளை 17ம் தேதி இரண்டாம் நாள் தெப்பமும், 18ம் தேதி மூன்றாம் நாள் தெப்பத்துடன், ஆடிக் கிருத்திகை விழா நிறைவு பெறுகிறது.