முதுகுளத்தூர்; முதுகுளத்தூர் அருகே தேரிருவேலி மேற்கு தெருவில் உள்ள இந்திரன் உட்பட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு மங்கலஇசை துவங்கி வேதபாராயணம்,விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம்,மகாலட்சுமி பூஜை முதல்கால, இரண்டாம்கால யாக பூஜை, பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது. இன்று மூன்றாம்,நான்காம் யாக பூஜை,நாடி சந்தனம்,மஹா பூர்ணாஹீதி தீபாரதனை நடந்தது.சிவாச்சாரியார்கள் தலைமையில் விமான கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மூலவரான இந்திரன், விநாயகர் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால்,சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம் தீபாரதனை நடந்தது.அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி, எம்.எல்.ஏ.,க்கள் முருகேசன்,தமிழரசி உட்பட கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.