பெரியபட்டினம்; வண்ணாங்குண்டு ஊராட்சி இலங்காமணியில் உள்ள பத்ரகாளி யம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. பெரியபட்டினம் அருகே உள்ள இலங்காமணியில் செல்வ விநாயகர், பத்ர காளியம்மன், பாலமுருகன், சமய கருப்பண்ண சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங் களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டது. ஆக.,19ல் அனுக்ஞை பூஜையுடன் முதல் கால யாகசாலை பூஜை துவங்கி யது. நேற்று காலையில் சூரிய பூஜை, கோ பூஜை உள்ளிட்ட இரண்டாம் கால பூஜைகள் நிறைவு பெற்றன. கோபுர விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.