திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலில் இளையான்குடி மாறநாயனார் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஆக 2025 01:08
சென்னை; 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார் குருபூஜை திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் விமர்சையாக நடைபெற்றது.
பூலோக கைலாயம் என்றும் அழைக்கப்படும் சென்னை திருவொற்றியூர் தியாகராஜ ஸ்வாமி வடிவுடையம்மன் கோவிலில் ஆதிபுரீஸ்வரர் சன்னதி அருகில் 63 நாயன்மார்கள் அருள் பாலிக்கின்றனர். இவர்களில் இளையான்குடி மாறநாயனார் குருபூஜை இன்று விமர்சையாக நடைபெற்றது . முன்னதாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது. அதை தொடர்ந்து பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பால் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு வஸ்திரம் அணிவித்து பலவண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.