கோவை; ஆவணி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் அனுமன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கோவை உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.