தொண்டாமுத்தூர்; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தனது பேத்திக்கு முடிகாணிக்கை செய்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்தார்.
பா.ஜ., மூத்த நிர்வாகியும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் இன்று தனது மகன், மருமகள், பேத்தி, சம்பந்தி என, குடும்பத்துடன் கோவை வந்தார். மருதமலை அடிவாரத்தில் உள்ள முடி காணிக்கை மண்டபத்தில், தனது பேத்திக்கு முடி காணிக்கை செய்துவிட்டு, மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்றனர். அங்கு, ஆதி மூலஸ்தானம், மூலஸ்தானம், பெருமாள் சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்த பின், விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை சென்றார்.