வானுார்; கிளியனுார் அடுத்த ஞானக்கல்மேடு கிராமத்தில் சுயம்பு பூத காளியம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதனையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. தொடர்ந்து தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தனர்.