சாம்ராஜ் நகர் மாவட்டம் கொள்ளேகாய் தாலுகாவில், புராதன பிரசித்தி பெற்ற சங்கடஹர கணபதி கோவில் அமைந்துள்ளது. இது 1000 ஆண்டுகள் பழமையானது. பெயருக்கு தகுந்தார் போன்று, இங்குள்ள கணபதியை நாடி வரும் பக்தர்களின் கஷ்டங்களை போக்கி மகிழ்ச்சியை அள்ளித் தருகிறார். இதனால், வெளிமாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாளில், சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. விநாயகர் சதுர்த்தியும் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது.