குருவாயூரில் "இல்லம் நிறை பூஜை: திரளான பக்தர்கள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2025 08:08
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் நேற்று நடந்த "இல்லம் நிறை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
விவசாயம் செழிக்கவும், மக்களின் வளமான வாழ்க்கைக்காகவும் வயலில் விளையும் நெற்கதிர்களால் "இல்லம் நிறை பூஜை நடைபெறுகிறது. ஆண்டு தோறும் ஆவணியில், இந்த பூஜை நடைபெறுகிறது. இந்த ஆண்டு பூஜை நேற்று நடந்தது. கோவில் கொடிமரத்தின் அருகே காலை 11:00 மணி முதல் நடந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நெற்கதிர்களை வாங்கிச் சென்றனர். கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு மேற்பார்வையில் மேல்சாந்தி பிரஹ்மஸ்ரீ கவபிரா மாறத்து அச்சுதன் நம்பூதிரி தலைமையில் பூஜை நடைபெற்றது. லட்சுமி பூஜைக்கு பிறகு நெற்கதிர்கள் மூலவருக்க சமர்ப்பிக்கும் நிகழ்வு நடந்தது. அதற்குப் பிறகு நெற்கதிர்களை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கோவில் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், உறுப்பினர் மனோஜ், மேலாளர் பிரமோத் களரிக்கல் ஆகியோர் பூஜை நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.