உடுமலை சித்தி விநாயர் கோவிலில் ரேணுகாதேவி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. உடுமலை சித்திவிநாயகர் கோவில் விசாலாட்சி உடனமர் பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் கோவிலில் அம்பாளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு பூஜை 28 ம்தேதி மாலையில் புற்றுபூஜை, சக்தி அழைத்தல், பாலாற்று பூஜைகளுடன் துவங்கியது.
மறுநாள் 29ம்தேதி மதியம் 12:00 மணிக்கு அம்பாளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.