சோமேஸ்வரர் கோவிலில் ‘திருவாசகம்’ அருளுரை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2025 11:09
உரிகம் பேட்டை பால சோமேஸ்வரர் கோவிலில் ‘திருவாசகம்’ அருளுரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. உரிகம் பேட்டையில் 1,000 ஆண்டுகள் பழமையான சோழர் காலத்து பால சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து சைவ மத வழிபாடுகள் நடந்து வருகிறது.
இக்கோவிலின் பூஜைகளை மஞ்சுநாத தீக் ஷித் செய்து வருகிறார். இக்கோவில் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. இக்கோவிலில், திருக்கயிலாய ஸ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீ காரியம் வாமதேவ சிவாக்கர தேசிக சுவாமிகள், ‘திருவாசகம்’ மற்றும் சிவ பெருமானை போற்றியும் அருளுரை, பக்திசை, பஜனை நடத்தினார். சிவபக்தர்கள் பலர் பங்கேற்றனர். மோகன்ராஜ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.