பாகூர் அடுத்த சேலியமேடு ஆஞ்ஜநேயர் கோவிலில், மதுரகவி ஆழ்வார் சபை சார்பில் 31ம் ஆண்டு வைஷ்ணவ மாநாடு நேற்று நடந்தது.
அதையொட்டி, காலை 7:00 மணிக்கு பஜனையுடன் கோகுல கண்ணன் வீதியுலா, 8:00 மணிக்கு கவுரவ தலைவர் ஜானகிராமன் கருடக்கொடியேற்றி வைத்தார். ஆண்டாள் பஜனை குழுவினரின் திருமால் துதி நடந்தது .
செயலாளர் சீனுவாச ராமானுஜதாசன் வரவேற்றார். துணை தலைவர் ரவி துவக்கவுரையாற்றினார். பொருளாளர்கள் சின்னராசு, லட்சுமிநாராயணன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். விழுப்புரம் நம்மாழ்வார் வைணவ சபை தலைவர் லட்சுமண ராமனுஜ சுவாமிகள் தலைமையுரையாற்றினார்.
திருக்கோவிலுார் ஜீயர் மடாதிபதி ஜீயர் சுவாமிகளின் மங்களாசாசனம் நடந்தது.
மேலும், இம்மாநாட்டில், திண்டிவனம் வெங்கடேச ராமானுஜ தேசிக தாசர் சுவாமிகள் ஆதிபிரான் என்ற தலைப்பிலும், திருவல்லிக்கேணி கிடாம்பி நாராயணன் சுவாமிகள் கண்ணிநுண் சிறுதாம்பு என்ற தலைப்பிலும்,காஞ்சிபுரம் அக்காரக்கனி ஸ்ரீநிதி சுவாமிகள் ஆச்சாரிய நிஷ்டை என்ற தலைப்பிலும், தென்திருப்பேரை அரவிந்த லோச்சனன் சுவாமிகள் மேலையார் செய்வனகள் என்ற தலைப்பிலும், மதுராந்தகம் ரவி வீரபட்டாச்சார்யார் சுவாமிகள் காலையும் -மாலையும் என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர்.