பழநி கோவிலில் 45.33 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2025 11:09
பழநி முருகன் கோவிலில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தில், 2.16 கோடி பக்தர்கள் பயன் அடைந்துள்ளனர். 2021 முதல், 45 லட்சம் பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர் என, நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: பழநி கோவிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம், 2012 செப்., 13ல் துவங்கப்பட்டது. இதுவரை, ரூ.2 கோடியே 16 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
2021 செப்., 5 முதல், 45 லட்சத்து 33 ஆயிரம் பேர் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்தியுள்ளனர். 2021 முதல், 2.80 லட்சம் பேருக்கு, இலவச சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
2 லட்சம் பேருக்கு மேல் இலவச பொட்டல சாதம், 2021ல் துவங்கப்பட்ட நீர் மோர், 36 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இலவச பஞ்சாமிர்தம் பிரசாதம் திட்டத்தில், 2022 முதல் ஒரு கோடி பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, 2022 முதல் வழங்கப்பட்டு வருகிறது. 72 லட்சம் பக்தர்கள் இலவச பேட்டரி கார் வசதிகளை பயன்படுத்தியுள்ளனர்.