Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் காளி கோயிலில் ஞாயிறு, ... பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாண்டியராஜாவாக கலந்து கொள்ள மதுரைக்கு புறப்பட்ட திருப்பரங்குன்றம் முருகன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாண்டியராஜாவாக கலந்து கொள்ள மதுரைக்கு புறப்பட்ட திருப்பரங்குன்றம் முருகன்

பதிவு செய்த நாள்

02 செப்
2025
11:09

திருப்பரங்குன்றம்; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடக்கும் ஆவணி மூல திருவிழாவில் பாண்டியராஜாவாக கலந்து கொள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து இன்று புறப்படாகினார்.

கோயிலில் எழுந்தருளியுள்ள கருப்பணசுவாமிக்கு பூஜை முடிந்து உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டது. தீபாராதனைக்கு பின்பு சர்வ அலங்காரத்தில் தங்க பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி வழி நெடுகிலும் பக்தர்களின் திருக்கண் மண்டகப்படிகளில் அருள்பாளித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றனர். அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது‌. இரவு நரியை பரியாக்கும் நிகழ்ச்சியில் மதுரை சுவாமிகளுடன் குன்றத்து சுவாமிகள் பங்கேற்றனர்.

செப். 6ல் ஆடி வீதிகளில் உலா நிகழ்ச்சி முடிந்து, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடக்கும். செப். 7ல் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புவர். இந்நாட்களில் திருப்பரங்குன்றம் கோயில் நடை திறப்பு, பூஜை வழக்கம் போல் நடக்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானின் பார்வை நம் ராசி மீது படுவது சிறப்பு. அதை குருபார்க்க கோடி நன்மை ... மேலும்
 
temple news
ஒத்தக்கடை: மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் விரைவில் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் உட்பட பெரும்பாலான ஊர்களில் உள்ள கோயில்களில் திருவண்ணாமலையில் தீபம் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி, சேவூர் அருகே கூளேகவுண்டன்புதுார் மொக்கணீஸ்வரர் கோவிலில், சர்வாலய தீபஜோதி விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar