காளஹஸ்தி; வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீசைலம் பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுன சாமி கோயிலில் இருந்து காணிபாக்கம் விநாயகர் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்கள் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் எம். ஸ்ரீனிவாஸ் ராவ் குடும்பத்தினர் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை சமர்பித்தனர். அவர்களுக்கு காணிப்பாக்கம் கோவில் செயல் அலுவலர் பென்சல கிஷோர் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு கோயிலில் சிறப்பு தரிசன தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து சுவாமி தீர்த்தப் பிரசாதம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், கோயில் துணை செயல் அதிகாரி சேகர் பாபு, ஸ்ரீசைலா கோயில் துணை செயல் அதிகாரி ஹரிதாஸ் காணிப்பாக்கம் கோயில் துணை செயல் அதிகாரிகள் எஸ்.வி.கிருஷ்ணா ரெட்டி, ரவீந்திரபாபு, தனஞ்செயா, பிரசாத், தனபால், கண்காணிப்பாளர்கள் கோதண்டபாணி, வாசு, பால ரங்கசாமி, கோயில் ஆய்வாளர் சிட்டிபாபு, பாலாஜி நாயுடு, வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.