பந்தலூர் தாலுக்காவில் 51 விநாயகர் சிலைகள் விஜர்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2025 01:09
பந்தலூர்; பந்தலூர் தாலுக்காவில் இந்து முன்னணி சார்பில் 51 சிலைகள் வைக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக பூஜிக்கப்பட்டு வந்தது. இந்த சிலைகள் அனைத்தும் பந்தலூர் ரிச் மவுண்ட் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் துவங்கிய ஊர்வலத்தில் ஒன்றிய துனை தலைவர் பிரசாந்த் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜா தலைமை வகித்தார்.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார், ஆர். எஸ். எஸ் .மாவட்ட தலைவர் சுந்தரம் ஆகியோர் ஊர்வலத்தை துவக்கி வைத்து, இந்து சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டியதன் அவசியம் மற்றும் தேசபக்தியின் முக்கியத்துவம் குறித்தும், விநாயகர் சதுர்த்தியின் முக்கியத்துவம் குறித்தும் பேசினார். மேலும் இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் நிலங்கள் விற்பனை செய்யப்படுகிறது மற்றும் பிற மத நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முதல்வர் உள்ளிட்ட திராவிட கட்சி நிர்வாகிகள், இந்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு வராததன் மூலம் இந்து மக்களுக்கு எதிரானவர்கள் வெளிக்காட்டி உள்ளனர் என்றார். தொடர்ந்து சிலைகள் அனைத்தும் பந்தலூர், மேங்கோரேஞ்ச், தொண்டியாலம், உப்பட்டி, நெல்லியாளம் வழியாக பொன்னானி மகா விஷ்ணு கோவிலையை ஒட்டிய ஆற்றங்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்பட்டது. தாசில்தார் சிராஜூநிஷா, ஏ.டி.எஸ்.பி. சவுந்தர்ராஜன், டி.எஸ்.பி. ஜெயபாலன் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மேற்பார்வையில் பாதுகாப்பு பணி மேற்க் கொள்ளப்பட்டது. இதில் பந்தலூர் சுற்றுவட்டார பகுதி ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.