சின்னமனுார் மாணிக்கவாசகர் கோயில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 10:09
சின்னமனூர்; சின்னமனூர் மாணிக்கவாசகர் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் ‘சிவ சிவ ஹர ஹர மகாதேவா’ எழுப்பி பரவசம் அடைந்தனர். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகருக்கு சின்னமனூரில் மட்டுமே தனி மூலவர் சன்னதி உள்ளது. வேறு எங்கும் தனிக் கோயில் கிடையாது. இக் கோயிலில் மாணிக்கவாசகர் மூன்று மூலவர்களாக எழுந்தருளியிருப்பதும் தனிச் சிறப்பாகும். இங்கு தெற்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கும் ஒற்றை சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு கேட்ட வரம் தருவார் என்ற ஐதீகம் உள்ளது. கோயில் பரம்பரை அறங்காவலர் மேற்பார்வையில் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து மகா கும்பாபிஷேகத் திற்கான யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை நான்காம் கால யாக வேள்விகள் நடந்தது.
காலை 7:30 மணிக்கு கலைகள் நாடிகள் வழியாக மூலத் திருமேனியை அடைதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 8:00 மணிக்கு வேள்விகள் நிறைவடைந்தது. புனித நீர் திருக் குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9:35 மணிக்கு விமானங்கள் மற்றும் மூலமூர்த்திகளுக்கும் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது. கும்பாபிேஷகம் காண கூடியிருந்த பத்தர்கள் ‘சிவ சிவ ஹர ஹர மகாதேவா’ என்று கோஷமிட் வணங்கினர். இதனை தொடர்ந்து மாணிக்கவாசகர், காசி விஸ்வநாதர், விசாலாட்சி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தில் எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயல் அலுவலர் நதியா, பரம்பரை அறங்காவலர் அண்ணாமலை திருவாசகம் மற்றும் தெய்வீக பேரவை, மாணிக்கவாசகர் பன்னிரு திருமுறை பயிற்சி மன்றம், கைலாய வாத்தியக் குழுவினர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் செய்திருந்தனர்.