கள்ளக்குறிச்சி புத்தந்துார் முத்துமாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 10:09
கள்ளக்குறிச்சி; புத்தந்துார் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த புத்தந்துார் முத்துமாரியம்மன் கோவில் தேர் மற்றும் தீமிதி திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சுவாமி வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு காத்தவராயன் ஆரியமாலா திருக்கல்யாண வைபவம், அம்மனுக்கு பொங்கல் வைக்கும் வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று தேர் திருவிழா நடந்தது. மாலை 3 மணிக்கு முத்துமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். மகா தீபாராதனைக்கு பின்பு, தேரோடும் வீதிகளின் வழியாக பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாலை 6 மணிக்கு நடந்த தீ மிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்தனர். விழாவிற்கான ஏற்பாட்டுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.