கல்லுகுளம் நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2025 10:09
காஞ்சிபுரம்; சின்ன காஞ்சிபுரம் கல்லுகுளம் நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா விமரிசையாக நடந்தது. சின்ன காஞ்சிபுரம் கல்லுகுளம் வேகவதி தெருவில் உள்ள நாகாத்தம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5:30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரமும், 8:00 மணிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வும், காலை 11:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், பால்குட ஊர்வலமும் நடந்தது. மதியம் 1:30 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை 4:30 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கும் நிகழ்வும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு தும்பவனத்தம்மன் கைச்சிலம்பாட்ட கலைகுழுவினரின் பம்பை உடுக்கையுடன், பால விநாயகர், பாலமுருனுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய நாகாத்தம்மன் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். விழாவிற்கான ஏற்பாட்டை வேகவதி தெருவாசிகள் செய்திருந்தனர்.