பதிவு செய்த நாள்
04
செப்
2025
03:09
வாடிப்பட்டி; துவரிமான் அருகே தாராபட்டியில் ஆறுகரை கொக்குளம் கன்னித்தேவன் வகையறாக்கு பாத்தியப்பட்ட காமாட்சி அம்மன், பட்ட கருப்புசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. செப்.,3ல் முதல் காலயாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. இன்று காலை 2ம்கால யாக பூஜையை தொடர்ந்து கடம் புறப்பாடானது. நாகேஸ்வர சிவாச்சாரியார், செல்வ விநாயக வித்யாலயா மாணவர்கள் வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள், மாலை விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கன்னித்தேவன் வகையறா மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
அலங்காநல்லுார்; அ.புதுப்பட்டியில் ராமகிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 3ம் காலயாக பூஜையை தொடர்ந்து செல்வ விநாயகர், பாலமுருகன், பட்டீஸ்வரர், பலி பீடம், ஆஞ்சநேயர், கருடாழ்வார், கால பைரவர், நவகிரகங்கள் கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஏற்பாடுகளை அகமுடையார் சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.
அலங்காநல்லுார் அருகே சின்ன இலந்தைகுளத்தில் பூங்குத்தி ஆதி அமரடக்கி அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று காலை 2ம் கால பூஜையை தொடர்ந்து ஸ்ரீதர் ஐயர் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க பூர்ணகலா புஷ்பகலா சமேத சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலைத்துறை மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
பாலமேடு; பாலமேடு அருகே கோணப்பட்டி கிழக்குத் தெரு பகவதி அம்மன், கருப்புசாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. ஆக.,21ல் அழகர் கோவில் சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். 28ல் பக்தர்கள் காப்பு விரதம் துவங்கினர். செப்.,3 மாலை கணபதி ஹோமத்துடன் முதல்களால பூஜைகளும், இன்று காலை 2ம் கால யாக பூஜைகள் நடந்தன சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.