வடமதுரை; வடமதுரை ஸ்ரீமத் சித்தி முக்தி விநாயகர் கோயில் வருடாந்திர பூஜை இரு நாட்கள் நடந்தது. நேற்று கள்ளியடி பிரம்மா மடத்தில் இருந்து மங்கம்மாள் கேணி வழியே கோயிலுக்கு தீர்த்தம், பால் குடங்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. இன்று காலை யாக வேள்வி பூஜைகள் நடந்த பின்னர் கடங்கள் புறப்பாடாகி அபிஷேகம் நடந்தன. பின்னர் உற்ஸவர் வீதியுலா, அன்னதானம் நடந்தது. * அய்யலுாரில் தஞ்சை ஸ்ரீ ஜோதிவேல் சுப்பிரமணியர் கோயிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்த நிலையில் இன்று வருடாபிஷேகம் நடந்தது. யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து ஸ்ரீ வள்ளி, தேவசேனை சுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. பின்னர் அய்யலுார் கடை வீதி வழியே திருவீதியுலா நடந்தது. ஏற்பாட்டினை குருசாமிகள் சுப்பிரமணியன், பிரேமாராணி செய்திருந்தனர்.