சந்திர கிரகணம்; நாளை 1:30 மணி முதல் நவபாஷாண கோயில் மூடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2025 03:09
தேவிபட்டினம்; தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இதனால் இங்குள்ள நவக்கிரகங்களை வழிபாடு செய்வதற்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், நாளை செப்.7ல் இரவு 9:56 மணி முதல் 1:52 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்வு நடக்கிறது. அதனால், நாளை மதியம் 1:30 மணி முதல் நவக்கிரக கோவிலுக்கு சென்று வழிபடுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நடை அடைக்கப்படுகிறது. நாளை மறுநாள் காலை முதல் வழக்கம்போல் நவபாஷாண கோயில் தரிசனத்திற்கு திறக்கப்படும் என நவபாஷாண அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், நாளை பிற்பகலுக்கு மேல் நவ பாசனத்திற்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர்.