பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கஜேந்திர மோட்ச விழா நடந்தது.
எமனேஸ்வரம் சௌலவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் 3ம் ஆண்டு கஜேந்திர மோட்ச விழா நடந்தது. தொடர்ந்து காலை 8:00 மணிக்கு வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் அமர்ந்தார். பின்னர் 10:30 மணிக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த தீர்த்த தொட்டியில் கஜேந்திரன் என்ற யானைக்கு மோட்சமளிக்கும் லீலை நடந்தது. மகாதீப ஆராதனைகள் நடந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை 4:00 மணிக்கு பெருமாள் ஆற்றில் இருந்து புறப்பட்டு ரத வீதிகள் சுற்றி கோயிலை அடைந்தார். விழாவில் சபை நிர்வாகிகள், கஜேந்திர மோட்ச விழா குழுவினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.