சந்திர கிரகணம் முடிந்து அயோத்தி ராமர் கோவிலில் நடை திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2025 05:09
அயோத்தி; சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று (செப். 7ல்) நடை சாத்தப்பட்ட அயோத்தி ராமர் கோவிலில் பரிகார பூஜைகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று (செப். 7ல்) மதியம் 12:30 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. கிரகணம் முடிந்தை தொடர்ந்து இன்று திங்கட்கிழமை, செப்., 8ம் தேதி அன்று, காலை பரிகார பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மங்கள ஆரத்திக்குப் பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராம்லல்லா சர்க்காரின் தெய்வீக தரிசனத்தைப் பெற்றனர்.