இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று வருடாபிஷேக விழாவிற்காக அதிகாலை அம்மனுக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து உற்ஸவர் முத்துமாரி அம்மன் கோயிலின் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் மேள,தாளங்கள் முழங்க ஊர்வலமாக புனித நீரை கொண்டு சென்று அம்மனுக்கும், மூலவருக்கும் அபிஷேகம் செய்தனர்.
பின்னர் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தாயமங்கலம்,இளையான்குடி, பரமக்குடி,மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.