காரமடை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15செப் 2025 05:09
கோவை; காரமடை காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காரமடையில் சந்தை அருகே காமாட்சி அம்மன் கோவிலும், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் அருகே கற்பக விநாயகர் கோவிலும் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகம் நேற்று 14ம் தேதி நடைபெற்றது. நேற்று காலை 5:00 மணிக்கு யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பட்டு கற்பக விநாயகருக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து காலை 7:30 மணிக்கு மேல் காமாட்சி அம்மனுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அஸ்வின் சிவாச்சாரியார் குழுவினர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர், விழாவில் காமாட்சி அம்மன் கற்பக விநாயகர் அறக்கட்டளை தலைவர் கெ. சு மணி, திருக்கோவில் நிர்வாகி செங்குட்டுவேல், மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள். ஏராளமான பக்தர்கள் பல்கேற்று தரிசனம் செய்தனர்.