Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புரட்டாசி மாத பிறப்பு, ஏகாதசி; ... புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகர் சிற்பம் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அருகர் சிற்பம் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

17 செப்
2025
11:09

திருவண்ணாமலை மாவட்டத்தில், சமண சமயத்தின் அருகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யூர் ஒன்றியம், அனக்காவூர் ஏரியில், நீரில் மூழ்கிய நிலையில் இருந்த அருகர் சிற்பத்தை, அகிம்சை நடை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீதரன் அப்பாண்டைராஜ் அடையாளப்படுத்தி உள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: அனக்காவூர் கிராமத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தின் மூன்றாவது பெரிய ஏரியான இது, ஐந்தாண்டுகளுக்கு முன் துார்வாரப்பட்டபோது, பீடத்துடன் கூடிய ஒரு சிற்பம் கிடைத்துள்ளது. அது, கரையில் வைக்கப்பட்ட நிலையில், மண் கரைந்ததால் ஏரிக்குள் நழுவிச் சென்றுள்ளது. தற்போது, தண்ணீர் கொஞ்சம் வற்றியுள்ளதால், சிற்பம் வெளியில் தெரிகிறது. அதன் மேற்புறம் பாசி படர்ந்து காய்ந்துள்ளது. இது, உள்ளூர் மக்களால் எல்லைச்சாமி, நொண்டிச்சாமி, வெள்ளாயச்சாமி என்ற பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் தன்மையை ஆராய்ந்தபோது, 11ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கலை பாணியில் அமைக்கப்பட்ட அருகர் சிற்பம் என்பது தெளிவாகிறது. அருகர் என்பவர், தமிழ் சமண சமயத்தில் முதன்மையானவராக கருதப்பட்டவர். பின், ஜெயின் சமயத்துடன் இணைக்கப்பட்டு தீர்த்தங்கரராக பாவிக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.   – நமது நிருபர் –

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
உத்தர பிரதேசம்: அயோத்தி ராம ஜென்மபூமியில் ராம நவமி விழா இன்று காவி கொடியேற்றத்துடன் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; பழநி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமி உத்சவத்திற்காக, கோலாகல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை 2,000 ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; உலகளந்த பெருமாள் கோவிலில் பங்குனி மாத ஏக தின பிரம்மோற்சவ விழா நடந்தது.திருக்கோவிலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar