சென்னை; வடபழனி, ஆதிமூலப்பெருமாள் கோவிலில் கடந்த 15ம் தேதி திங்கட்கிழமை பாஞ்சராத்ர கிருஷ்ண ஜயந்தி உத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. விழா அன்று காலை 7.30 மணிக்கு பெருமாள், கண்ணன் திருமஞ்சனம் ஆஸ்தானம், திருப்பாவை, பெரியாழ்வார் திருமொழி சேவை,சாற்றுமறை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு அமலனாதிபிரான் சேவை, திருவாராதனம், விசேஷ தீபாராதனை, சங்குபால் அர்க்யம், சாற்றுமறை,தீர்த்த பிரசாத விநியோகம். சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.