பதிவு செய்த நாள்
25
டிச
2012
11:12
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி உற்சவம், வெகு விமரிசையாக நடந்தது.கருட வாகனத்தில்...
காஞ்சிபுரம், வைகுண்டப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. காலை 4:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி, வீதி உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.வரதராஜப் பெருமாள் கோவிலில், ரத்தினாங்கி சேவை நடந்தது. அழகிய சிங்க பெருமாள் கோவில், விளக்கொளிப் பெருமாள் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், பாண்டவபெருமாள் கோவில் உட்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
தங்க மண்டபத்தில்...ஸ்ரீபெரும்புதூர்: ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடும், ஆராதனையும் நடந்தது. தங்க மண்டபத்தில், ஆதிகேசவப் பெருமாளும், பாஷ்யகார சுவாமி உற்சவ மூர்த்திகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில், அதிகாலை 4:30 மணிக்கு எழுந்தருளினர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.மாமல்லபுரம்: ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் காலை 3:00 மணிக்கு நடை திறந்து, மார்கழி மாத பூஜை மற்றும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. மூலவர் ஸ்தலசயனப்பெருமாள், திரு ஆபரண அலங்காரத்தில், மண்டபத்தில் எழுந்தருளினார். வேத பாராயணத்திற்குபின், 5:30 மணிக்கு, கோவில் நுழைவாயில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர்.புஷ்ப அங்கி சேவைதிருவிடந்தை: நித்யகல்யாண பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று திரை விலக்கி, அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறந்து, புஷ்ப அங்கி சேவையில் அவர் காட்சியளித்தார். பின், 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரங்கநாத உற்சவர் வீதியுலா சென்றார்.சிங்கபெருமாள் கோவில், பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பெருமாளை வழிபட்டனர்.