பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடக்கிறது. முதல் சனிக்கிழமையான நாளை, 20ம் தேதி ரங்கநாதர் பூதேவி, ஸ்ரீதேவியுடன், அன்ன வாகன எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். காலை, 7:00 மணி, மதியம், 11:00 மணி இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதே போல இரண்டாம் சனிக்கிழமை செப்., 27ம் தேதி அனுமந்த வாகன உற்சவம், மூன்றாம் சனிக்கிழமை அக். 4ம் தேதி சேஷ வாகன உற்சவம், நான்காம் சனிக்கிழமை அக். 11ம் தேதி கருட வாகன உற்சவம், ஐந்தாம் சனிக்கிழமை அக். 18ம் தேதி யானை வாகன உற்சவத்தில் ரங்கநாதர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.