தொண்டி பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனி விழா; சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2025 03:09
திருவாடானை; தொண்டியில் உந்திபூத்த பெருமாள், பாண்டுகுடியில் லட்சுமிநாராயண பெருமாள், ஆலம்பாடி கரியமாணிக்க பெருமாள், திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வரதராஜ பெருமாள் மற்றும் குளத்துார் உள்ளிட்ட பல கிராமங்களில் பெருமாள் கோயில்களில் புரட்டாசி முதல் சனியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.