Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி துவக்கம்.. ஒன்பது நாள் ... திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி மதிபுள்ள 15 தங்கப் பதக்கம் நன்கொடை திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.1.80 கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி நவராத்திரி விழா; தினசரி 108 முறை துர்கா சப்தஷ்லோகி பாராயணம்
எழுத்தின் அளவு:
சிருங்கேரி நவராத்திரி விழா; தினசரி 108 முறை துர்கா சப்தஷ்லோகி பாராயணம்

பதிவு செய்த நாள்

22 செப்
2025
10:09

சிருங்கேரி ; ஆதிசங்கரர் 1200 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவித்த நான்கு ஆம்னாய பீடங்களில் முதன்மையானது சிருங்கேரி சாரதா பீடம். சாரதா பீடத்தின் 36வது பீடாதிபதியாக ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம் உள்ளார். இங்கு இந்தாண்டு நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.


நமது நாட்டில் அனாதி காலத்திலிருந்து அம்பாள் ஆராதனையை செய்துகொண்டு வருகிறோம். தேவதைகள், ரிஷிகள், அவதார புருஷர்கள், பண்டிதர்கள், கவிஞர்கள்,  மஹாராஜாக்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அம்பாளை மிகுந்த பக்தி, சிரத்தையுடன் உபாஸித்து, அம்பாளின் அருளால் விரும்பினவற்றை எல்லாம் அடைந்தனர். மஹாபாரதத்தில் குருக்ஷேத்ரப்போரின் தொடக்கத்தில்,  ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம், “இந்தப் போரில் உனக்கு வெற்றிக் கிடைக்க வேண்டுமானால் நீ அம்பாளின் அருளை அவசியமாகப் பெற வேண்டும்” என்று கட்டளையிட்டபோது, அர்ஜுனன் ஸ்ரீதுர்கா பரமேச்வரியைக் குறித்து தவம் செய்து ஜகதம்பாளின் அனுக்ரஹத்தைப் பெறுகிறான். ஜகத்குரு ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாசார்யாளும், ஜகன்மாதாவைப் பற்றி அநேக அற்புதமான ஸ்தோத்திரங்களை இயற்றியதோடு, தர்மத்தின் நிரந்தர பிரச்சாரத்திற்காக நிறுவிய சிருங்கேரி பீடத்தின் முக்கியமான தேவதையாக ஸ்ரீசாரதாம்பாளை பிரதிஷ்டை செய்தருளினார்.


ஒவ்வொரு ஆண்டும்  ஹிந்துக்கள் அனைவரும், மிகுந்த பக்தி, சிரத்தையுடன் வெகுசிறப்பாக அம்பாளை ஆராதித்து சரன் நவராத்திரி மஹோத்ஸவத்தைக் கொண்டாடுகின்றனர். தற்போது நமது மாநிலம், நாடு, சமூகம் மற்றும் தர்மத்திற்கு ஏற்பட்டுவரும் பல்வேறு கஷ்டங்களுடன், ஆஸ்திக பக்த மஹாஜனங்கள் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள வேண்டியுள்ள அனைத்து தொந்தரவுகளும் நீங்கி, எல்லா வகையிலும் மிகவுயர்ந்த நிலையை அனைவரும் அடைய வேண்டும் என்ற ஸங்கல்பத்துடன், இந்த ஆண்டு சரன் நவராத்திரி மஹோத்ஸவத்தின் புண்ணிய சந்தர்ப்பத்தில், பிரதமை (22-09-2025) திதியிலிருந்து, விஜயதசமி (02-10-2025) வரை, மார்கண்டேய புராணத்தில் உள்ள மிகுந்த மஹிமை பொருந்திய ஸ்ரீதுர்கா ஸப்ததீயின் சுருக்கமான “ஸ்ரீதுர்கா ஸப்தலோகி” என்ற ஏழு சுலோகங்கள் கொண்ட ஸ்தோத்திரத்தை தினமும் 108 தடவைக்குக் குறையாமல் எல்லா ஆஸ்திக பக்த மஹாஜனங்களும் பாராயணம் செய்ய வேண்டுமென்று  ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் எல்லா கஷ்டங்களும் நீங்கி, எல்லாவித மங்களங்களும் உண்டாகும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகையால் அனைத்து ஆஸ்திக பக்த மகாஜனங்களும் இதில் கலந்து கொண்டு, மேலே கூறியபடி பாராயணம் செய்து பயன்பெறலாம். பாராயணம் செய்ய வேண்டிய சுலோகங்களை, ஜகத்குரு மஹாஸ்வாமிகள் அவர்களின் அருட்குரலிலும்,  பல்வேறு எழுத்து வடிவங்களிலும் உங்களுக்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


ஸ்ரீதுர்கா ஸப்தலோகி சுலோகம்!


மம ஶ்ரீதுர்காபரமேஶ்வரீப்ரஸாதேன சிந்திதஸகலமனோரதஸித்த்யர்தம், ஆயுர்வித்யாயஶோபலவ்ருத்த்யர்தம், ஸர்வாரிஷ்டபரிஹாரத்வாரா ஸமஸ்தமங்கலாவாப்த்யர்தம், விஶேஷத꞉ அஸ்மின் பாரததேஶே பரித்ருஶ்யமானபரஸ்பரவித்வேஷ–ஹிம்ஸா–நிந்தாதீனாம் நிவ்ருத்தித்வாரா தர்மஶ்ரத்தாலூனாம் ஸகலஶ்ரேயோ(அ)பிவ்ருத்த்யர்தம், ஏதத்தேஶராஜ்யபரிபாலகானாம் தர்மே ஶ்ரத்தாபிவ்ருத்த்யர்தம், தனதான்யாதிஸகலஸம்பத்ஸம்ருத்த்யர்தம் ஶ்ரீதுர்காஸப்தஶ்லோகீபாராயணம் கரிஷ்யே।


ஜ்ஞானிநாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஹி ஸா ।

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹாமாயா ப்ரயச்சதி ॥1॥


துர்கே ஸ்ம்ருதா ஹரஸி பீதிமஶேஷஜந்தோ꞉

ஸ்வஸ்தை꞉ ஸ்ம்ருதா மதிமதீவ ஶுபாம் ததாஸி ।

தாரித்ரயது꞉க-பயஹாரிணி கா த்வதன்யா

ஸர்வோபகார-கரணாய ஸதார்த்ரசித்தா ॥2॥


ஸர்வமங்கலமாங்கல்யே ஶிவே ஸர்வார்தஸாதிகே ।

ஶரண்யே த்ர்யம்பகே கௌரி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥3॥


ஶரணாகததீனார்தபரித்ராணபராயணே ।

ஸர்வஸ்யார்திஹரே தேவி நாராயணி நமோ(அ)ஸ்து தே ॥4॥


ஸர்வஸ்வரூபே ஸர்வேஶே ஸர்வஶக்திஸமன்விதே ।

பயேப்யஸ்த்ராஹி நோ தேவி துர்கே தேவி நமோ(அ)ஸ்து தே ॥5॥


ரோகானஶேஷான்-அபஹம்ஸி துஷ்டா

ருஷ்டா து காமான் ஸகலானபீஷ்டான் ।

த்வாமாஶ்ரிதானாம் ந விபன்னராணாம்

த்வாமாஶ்ரிதா ஹி ஆஶ்ரயதாம் ப்ரயாந்தி ॥6॥


ஸர்வாபாதாப்ரஶமனம் த்ரைலோக்யஸ்யாகிலேஶ்வரி ।

ஏவமேவ த்வயா கார்யம் அஸ்மத்வைரி-விநாஶனம் ॥7॥

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar