Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சித்தர் சுவாமிகள் நுழைவு ... சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு பூஜை! சபரிமலையில் ஜன. 14ல் மகரவிளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2012
11:12

கும்பகோணம்: சாரங்கபாணி ஸ்வாமி கோவிலில் நேற்று நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொன்மையும் பழமையும் வாய்ந்த, வரலாற்று சிறப்புடையதாக, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் திகழ்கிறது. ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருக்கோவில். திருமழிசையாழ்வாருக்கு நேரில் காட்சி தந்து, அவரது வேண்டுகோளுக்கிணங்கி, சயனித்துள்ள மூலவர் சாரங்கபாணிசுவாமி சற்று எழுந்திருக்கும் நிலையில், உத்தான சாயியாய் கருவறையில் எழுந்தருளிய தலம் என்ற சிறப்பு பெற்றது.108 திவ்ய தேசங்களில் திருவரங்கம், திருப்பதி தலத்துக்கு அடுத்து, மூன்றாவது சிறப்பு வாய்ந்த திருத்தலமாக இக்கோவில்திகழ்கிறது. இங்கு பெருமாள் வைகுண்டத்திலிருந்து, அவர் எழுந்தருளியுள்ள ரதத்துடனேயே இங்கு தங்கிவிட்டார் என்பதற்கு அறிகுறியாக, அவரது கர்ப்பகிரகம் யானை குதிரைகளுடன் கூடிய உருவத்தில் அமைந்திருக்கிறது.இதனாலேயே இத்திருத்தலம் நித்ய வைகுண்டம், பூலோக வைகுண்டம் என போற்றப்படுகிறது. இக்கோவிலே வைகுண்டமாக கருதப்படுவதால், இங்கு தனியாக சொர்க்கவாசல் என்பது கிடையாது. இவ்வாறு பல சிறப்புகள் பெற்ற, இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா ந டந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை, 3 மணிக்கு விசுவரூப தரிசனத்துடன் விழா துவங்கியது.ஆராவமுதன் முத்தங்கி சேவையில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். ஸ்ரீரங்கத்திலிருந்து மலர் மாலைகள் வரவழைக்கப்பட்டு அணிவிக்கப்பட்டன. கோவில் முழுவதும் மின் அலங்காரம் செய்யப்பட்டும், சேவார்த்தி மண்டபத்தில் பக்தர்கள் அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானல் நாயுடுபுரம் டிப்போ பத்ரகாளி அம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருவெண்ணெய்நல்லுார், : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள ஞானகுரு தட்சணாமூர்த்தி குரு பீடத்தில் குரு ... மேலும்
 
temple news
ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சானமாவு அருகே டி.கொத்தப்பள்ளியில் திரவுபதி தர்மராஜ சுவாமி ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர்-செண்பகவள்ளி அம்மன் கோவிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. இதைத் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar