கொட்டும் மழையில் நடனம் ஆடி தஞ்சை பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்திய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2025 11:09
தஞ்சாவூர்; நவராத்திரி விழாவை முன்னிட்டு இடி - மின்னலுடன் மழை பெய்த போதும் நிறுத்தாமல் பரதம் ஆடி, தஞ்சை பெருவுடையாருக்கு பக்தர்கள் இசை அஞ்சலி செலுத்தியது மெய்சிலிர்க்க வைத்தது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவில் நந்தி மண்டப மேடையில் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. பாரத கலைஞர்கள் நந்தி மண்டபம் மேடையில் நாட்டியம் ஆடி கொண்டிருந்த நேரத்தில் திடிரென மழை பொழிய தொடங்கியது. தூரலாக தொடங்கிய மழை இடி, மின்னல், காற்றுடன் கன மழை பெய்தது. நாட்டியத்தை நிறுத்தாமல் பரத கலைஞர்கள் தொடர்ந்து நடனம் ஆடினார்கள்.
தி மிக்க திமிக்க தக்க திமிக்கிடதோம்.
தோம் தோம் தகிட்டத தகிட்டத தக்கதோம்
திமிக்க திமிக்க தக்க திமிக்க திமிக்க தக்க
ஈசா சர்வேசா தோம் தோம்
சிவ சம்போ, சம்போ சிவ சம்போ என நட்டுவாங்கத்திற்கு ஏற்ப நடனம் ஆடி பெருவுடையாருக்கு இசை அஞ்சலி செலுத்தினார்கள். பரதநாட்டிய கலைஞர்கள் மழையில் நடனம் ஆடியதை, கூடியிருந்த மக்கள், நாட்டியத்தை ரசித்து, கைதட்டி ஆரவாரம் செய்தனர்.