Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஹிந்து பண்டிகைகளில் நன்மை தரும் ... திருப்பதி பிரம்மோற்சவம்: ஆண்டாள் மாலை சூடி மோகினி அலங்காரத்தில் பெருமாள் பவனி திருப்பதி பிரம்மோற்சவம்: ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூரில் நவராத்திரி கொண்டாட்டம்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூரில் நவராத்திரி கொண்டாட்டம்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

28 செப்
2025
01:09

திருப்பூரில் நவராத்திரி விழா கோலாகலமாக நடந்து வருகிறது; வடமாநில மக்களும், தங்கள் பாரம்பரிய வழக்கப்படி, துர்காபூஜை என்ற பெயரில் பக்திபரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.


திருப்பூர் மாநகர பகுதியில், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் வசிக்கின்றனர்; அதேபோல், நமது நாட்டில் உள்ள, 21 மாநிலங்களை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வசிப்பதால், அவரவர் வழக்கப்படி, பாரம்பரிய பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், கடந்த, 22 ம் தேதி முதல் நவராத்திரி விழா களைகட்டிக்கொண்டிருக்கிறது. திருப்பூர் மற்றும் நல்லுார் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில்,தினமும் சிறப்பு பூஜையும், கலைநிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், மீனாட்சி திருக்கல்யாண கோலம், மஹாசதாசிவ மூர்த்தி சுவாமி உருவங்களை செய்து, நவராத்திரி வழிபாடு நடந்து வருகிறது.


இதேபோல், கோவில்கள் மற்றும் வீடுகளில், நவராத்திரி கொலு வழிபாடும் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கிறது. வரும், 1 ம் தேதி சரஸ்வதி பூஜையும், 2 ம் தேதி விஜயதசமி விழாவும் நடக்க உள்ளது. இந்நிலையில், நவராத்திரியின் ஆறாவது நாளான நேற்றும், கொலு வழிபாடு சிறப்பாக நடந்தது.


வடமாநில மக்கள், அந்தந்த மாநில பாரம்பரிய வழக்கப்படி, துர்கை, லட்சுமி, சரஸ்வதி, விநாயகர், முருகர் சிலைகளை செய்து, தினமும் வழிபாடு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பூரில் துர்கா பூஜையும் விமரிசையாக நடந்து வருகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar