பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில், கடந்த, 90 ஆண்டுகளாக புரட்டாசி சனிக்கிழமைகளில், பஜனை மற்றும் பெருமாள் திருவீதி உலா நடப்பது வழக்கம். இந்தாண்டு, நவராத்திரி மற்றும் புரட்டாசி சனிக்கிழமை பஜனை நடந்து வருகிறது. திருவீதி உலாவுக்காக புதிதாக விக்ரகங்கள் செய்யப்பட்டு, கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் பூஜை துவங்கியது. புனித நீர் கலசங்களுக்கு பூஜை, திரவிய ஹோமம், பூர்ணா குதி நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு, புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. ஆசிரம நிர்வாகிகள், பக்தர்கள், ஆசிரம மாணவர்கள் பலர் பங்கேற்றனர் . அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் பஜனையுடன் திருவீதி உலா நடந்தது.