தென்திருப்பதியில் பிரம்மோற்சவ தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2025 11:10
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென்திருப்பதி ஸ்ரீ வாரி ஆலயத்தில் முக்கிய நிகழ்வான திருப்பு தேர் வைபவம் நடந்தது. ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் வருடாந்திர பிரம்மோற்சவம் நிகழ்ச்சி செப்டம்பர் 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷ வாகனம் சின்ன சேஷ வாகனம் அன்னபக்ஷி வாகனம் சிம்ம வாகனம் முத்து பந்தல் வாகனம் கல்ப விருட்ச வாகனம் சர்வ பூபால வாகனம் உள்ளிட்டவை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் மாலை சமர்ப்பித்தல் வைபவம் தொடர்ந்து மலையப்ப சுவாமி மோகினி திருக்கோளத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். அவருடன் கிருஷ்ணரும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து கருடவாகனம் சூரிய பிரபை சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமியின் பிரமோர்ட்சவ முக்கிய நிகழ்வாக தேரோட்டம் இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோற்சவ நிகழ்ச்சி ஏற்பாட்டினை அன்னூர் கோவிந்தசாமி நாயுடு குடும்பத்தினர் மேற்கொண்டனர்.