ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02அக் 2025 09:10
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி பிரமோற்ஸவம் ஒன்பதாம் நாளில் செப்பு தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு இன்று காலை 5:40 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி செப்பு தேருக்கு எழுந்தருளினர். அங்கு ஹரிஷ் பட்டர் சிறப்பு பூஜை செய்தார். பின்னர் காலை 7:40 மணிக்கு கோவிந்தா, கோபாலா கோசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கோயில் யானை ஜெயமால்யதா முன் செல்ல தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பட்டர்கள், அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.