விழுப்புரம்: கங்கையம்மன் கோவில் மண்டல அபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அருகே வாணியம்பாளையம், கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த வாரம் நடந்தது. தொடர்ந்து, மண்டல அபிஷேகம் நடந்து வருகிறது.
இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.