குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழாவில் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04அக் 2025 02:10
திருச்சி; குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் பிரம்மோற்சவ விழாவில் சுவாமி திருமஞ்சனம் கண்டு அருளினார்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படுவதும், குணசீல மஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பிரசித்தி பெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி கடந்த 24ம் தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக் கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கியநிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி பிரம்மோற்சவ விழாவின் 9-ம் நாளான நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இன்று உற்சவர் பிரசன்ன வெங்கடாஜலபதி, ஸ்ரீதேவி, பூதேவிக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள், திருமஞ்சனம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நாளை பிரசன்ன வெங்கடாஜலபதி பூப்பல்லாக்கு உற்சவத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.