Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனிப்பிரதோஷம்: சிவன் கோயில்களில் ... புரட்டாசி தேர்த்திருவிழா புரட்டாசி தேர்த்திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயில்களில் ஒலித்த கோவிந்தா, கோவிந்தா கோஷம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில்களில் ஒலித்த கோவிந்தா, கோவிந்தா கோஷம்

பதிவு செய்த நாள்

05 அக்
2025
02:10

போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.


போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்டநாதர் அலங்காரத்தில் தாமரை பீடத்தில் அமர்ந்தபடி சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர்.


சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.


போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.


கூடலுார்: அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் உள்ள கூத்த பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை சிறப்பு பூஜை, அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுவாமிக்கு துளசி, தாமரைப்பூவில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கூடலுார், லோயர்கேம்ப், கம்பம், கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.


பெரியகுளம்: வரதராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 3:00 மணிக்கு சுப்ரபாத சேவை நடந்தது. பால், தயிர், பன்னீர் சந்தனம் உட்பட 16 வகையான பொருட்கள் அபிஷேகம் செய்யப்பட்டது. பட்டு ஆடைகள் உடுத்தி ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவர் வரதராஜப் பெருமாள் தீப ஒளியில் திருப்பதி வெங்கடாஜலபதிஅலங்காரத்தில்ஜொலித்தார்.


உற்ஸவர் பூதேவி, ஸ்ரீதேவியுடன் முத்தங்கி சேவை அலங்காரத்தில் காட்சியளித்தார். திருப்பாவை சேவித்தல், நட்சத்திர தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ நாமம் ஒலிக்க வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் செய்திருந்தார். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை துளசி அலங்காரத்தில் காட்சியளித்தனர்.‌15 மணி நேரம் அகண்ட நாமம் நடந்தது.


ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கிருஷ்ணசைதன்யதாஸ் செய்திருந்தார். பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. லட்சுமிபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது.‌ அர்ச்சகர் ராமானுஜர் பூஜைகள் செய்தார். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar