Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூழங்கலச்சேரி பெருமாள் கோவில் தெப்ப ... அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவில் மண்டல பூஜை நிறைவு அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஊட்டி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
ஊட்டி பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

06 அக்
2025
12:10

ஊட்டி; புரட்டாசி மாதம் தமிழர் வாழ்க்கையில் ஆன்மிக முக்கியத்துவம் மிகுந்த மாதமாக கருதப்படுகிறது.


புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் வாயிலாக பெருமாளின் அருளோடு சேர்த்து, குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம் என்பது நம்பிக்கை. இந்நிலையில், நேற்று முன்தினம் மூன்றாவது சனிக்கிழமை துவங்கியது. ஊட்டியில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதை தொடர்ந்து, பெருமாள் ஷேச வாகனத்தில் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தேரோட்டம், மணிக்கூண்டு, லோயர் பஜார், மத்திய பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோவில், காபி ஹவுஸ் சதுக்கம், கமர்சியல் சாலை வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஊட்டி பழைய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆஞ்ஜநேயர் கோவிலில், ஸ்ரீ ஆஞ்ஜநேய பெருமான் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்த சாரதி ( வேங்கட கிருஷ்ணன் ) பெருமாள் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருக்கோலத்தை கண்டு,‘கோவிந்தா, கோவிந்தா; ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் சீதா ராம்’ என பாடி சென்றனர். அலங்காரத்தினை கோவில் அர்ச்சகர் ஸ்ரீ ஹரிகிருஷ்ணன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar