Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குஜராத் கோயிலுக்கு ரூ.11 ‌கோடியில் ... சபரிமலை அய்யப்பன் கோவில் வருவாய் குறைந்தது! சபரிமலை அய்யப்பன் கோவில் வருவாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செப்பறையில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

28 டிச
2012
10:12

திருநெல்வேலி: திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு, செப்பறை அழகிய கூத்தர் கோயிலில் நடந்த தேரோட்டத்தில், திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் இழுத்தனர் சிவதாண்டமாடிய ஐந்து சபைகளில், தாமிரசபை நெல்லையப்பர் கோயிலில் உள்ளது. இதில், தாமிரபரணி ஆற்றங்கரையில் ராஜவல்லிபுரத்தில் உள்ள அழகியகூத்தர் கோயிலில், தாமிரசபை சிறப்பு வாய்ந்தது. செப்பறைகளால் வேயப்பட்ட திருத்தலம் திருமால், அக்னிபகவான், அகத்தியர் மணப்படை வீடு மன்னருக்கு சிவபெருமான் நடனக் காட்சியளித்த சிறப்பு கொண்டது. உலகின் முதல் நடராஜ மூர்த்தி இங்கு எழுந்தருளியதாக கூறப்படுவதுண்டு. இத்தகைய புகழ் பெற்ற நெல்லை ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலில், மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த டிச.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில், சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. 9ம் நாளான நேற்று, அழகிய கூத்தர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் இழுத்து தேரை நிலை சேர்த்தனர். இதே நாளில், சிதம்பரம் கோயிலிலும் தேரோட்டம் நடப்பது சிறப்புடையதாகும். இன்று (டிச.,28ல்) திருவாதிரை அதிகாலை 2 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், காலை 5.30 க்கு கோ பூஜை, ஆருத்ரா தரிசனம், நண்பகல் 1.30 க்கு நடராஜர் திருநடன காட்சி, அழகிய கூத்தர் வீதி உலா வருதல், மாலையில் பஞ்சமுக அர்ச்சனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar