சூளேஸ்வரன்பட்டி விஜயகணபதி கோவிலில் 12ம் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14அக் 2025 12:10
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி அழகாபுரிவீதி விஜயகணபதி கோவிலில், 12ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பூஜ்யஸ்ரீ ததேவானந்தா சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடைபெற்றது. விழாவையொட்டி, காலை, 7:45 மணிக்கு கணபதி ேஹாமம், அபிேஷகம், காலை, 9:45 மணிக்கு அலங்காரம், தீபாராதனையும் நடைபெற்றன. மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.